பிதற்றும் பிரபலங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான்: வெங்கடேசன் எம்பி

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (12:50 IST)
விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து கூறிய சர்வதேச பிரபலங்களுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவில் உள்ள பிரபலங்கள் கடந்த இரண்டு நாட்களாக டுவிட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். சச்சின் உள்பட பல கிரிக்கெட் பிரபலங்களும், கங்கனா ரனாவத் உள்பட பல திரையுலக பிரபலங்களும் பதிவு செய்யும் டுவிட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இந்திய பிரபலங்களின் டுவிட்டுக்களுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தான் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் தமிழக எம்பி வெங்கடேசன் அவர்கள் தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: விவசாயிகளின் போராட்டம் குறித்து வாய் திறக்காமல் அதிகாரத்துக்கு அடி பணிந்து இறையான்மை, உள்நாட்டு விவகாரம் என்றேல்லாம் பிதற்றும் பிரபலங்களுக்கு சொல்லிக்கொள்வது, காலம், எந்த அதிகாரத்தின் கைகளில் நீங்கள் கூலிகளாக இருக்கிறீர்களோ அந்த கைகளால் கூட தூக்கி நிறுத்த முடியாத கறாரான தராசு
 
மேலும் இந்த டுவிட்டில் அவர் சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளதால் அவரது இந்த கருத்து சச்சின் டெண்டுல்கருக்கு நேரடியாக சொல்வது போன்று உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்