வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.. அதிகாரிகள் சமாதானம் செய்தும் ஓட்டு போட மறுப்பு..

Siva

வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (11:23 IST)
வேங்கை கயல் உள்பட இரண்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளதாகவும் அதிகாரிகள் சமாதானம் செய்தும் ஓட்டு போட அந்த கிராம மக்கள் வர முடியாது என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் குடிநீர் தொட்டிகள் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் பல மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற கோபம் அந்த பகுதி மக்களிடையே உள்ளது

இந்த கோபத்தை அந்த பகுதி மக்கள் தேர்தலில் காட்டி வருவதாக தெரிகிறது. வேங்கை வயல் மற்றும் இறையூர் ஆகிய இரண்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளதாகவும் ஒருவர் கூட வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வரவில்லை என்றும் கூறப்படுகிறது

வேங்கை வயல் விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனவே வாக்களிக்க வாருங்கள் என்றும் அதிகாரிகள் சமாதானம் செய்தும் பல மாதங்கள் ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்காதது அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என்றும் எனவே எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றும் அந்த பகுதி மக்களுக்கு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்