வேங்கைவயல் விசாரணை 15 மாதங்களாகியும் முடிக்காதது ஏன்? நீதிபதிகள் கேள்வி

Siva

செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (13:45 IST)
வேங்கைவயல் விசாரணை 15 மாதங்களாகியும் முடிக்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் வேங்கைவயல் வழக்கின் விசாரணை இன்னும் 3 மாதத்தில் நிறைவடையும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை உறுதி அளித்துள்ளது.
 
வேங்கைவயல் சம்பவத்தில், 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என கூறிய காவல்துறையிடம் தலைமை நீதிபதி அமர்வு, ‘புலன் விசாரணையை விரைந்து முடிக்க காவல் துறைக்கு அறிவுறுத்தியதோடு, ஜூலை 3க்குள் புலன் விசாரணை முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தனர்.
 
மேலும் வேங்கைவயல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு ஜூலை 3க்கு தள்ளிவைக்கப்பட்டது.
 
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் உள்ள கிராமத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் கடந்த  2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி நடந்தது. இதனை அடுத்து 5 பிரிவுகளின் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவரும் நிலையில் இன்னும் குற்றவாளிகள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்