இந்தியாவின் வளர்ச்சியை விவசாயிகள் தடுக்கின்றனர். வேலூர் ஆட்சியர் பேச்சால் அதிர்ச்சி

சனி, 18 மார்ச் 2017 (04:03 IST)
சமீபத்தில் நெடுவாசல் உள்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மீத்தேன் என்ற ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த திட்டத்தால் விளைநிலங்கள் பாழாகும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.


 


இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஹைட்ரோகார்பன் பணிகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் கூறிய ஆட்சியர் ராமன், 'இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு வதந்திகளை கிளப்பிவருவதாகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்தின் உண்மைத்தன்மை தெரியாமல், அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தொடர்ந்து அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வீண் முட்டுக்கட்டை போடுவதாகவும் தெரிவித்தார்.

ஆட்சியர் ராமனின் அலட்சிய பேச்சு, விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்