துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து, ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கூறிவந்தனர். மேலும் ரஜினி மீது சென்னை மற்றும் கோவை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த புகார் இன்று விசாரனைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புகார் அளித்து 15 நாட்கள் முடிவடைவதற்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? எனவும், புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்கிய பின் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும், இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதே தவறு என கூறினார். இதனையடுத்து திராவிடர் விடுதலை கழகத்தினர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.