செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகள் நிரம்பியது: மணல் மூட்டைகள் தயார்

ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (20:04 IST)
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இதனால் நாளை சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், ஒருசில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கிய ஏரிகள் நிரம்பி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல் கட்டமாக சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரியான செம்பரபாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதாகவும் இதனை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிலும் உள்ள சிறுசிறு ஏரிகளும் நிரம்பியதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியும் தற்போது நிரம்பிவிட்டது. இதனால் அந்த ஏரியில் இருந்து வினாடிக்கு 5500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளதால் ஏரிக்கு அருகில் இருந்த ஐந்து கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது இதனால் மக்கள் அச்சமடைந்து பாதுகாப்பான பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் 
 
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் காரணமாக 20 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளதாகவும் அவர்களை மீட்க மீட்புப் பணிகள் படைகள் விரைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்