சென்னையில் நாளை பள்ளிகள் விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியின் அறிவிப்பு

ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (18:54 IST)
கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அதீத கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாரலட்சுமி அறிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் ஏற்கனவே தூத்துகுடி, கடலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் விடுமுறை குறித்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கூடுதலாக தொடர் கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு செய்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் புதுவையிலும் இதுவரை விடுமுறை அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் மண் சரிவு காரணமாக நாளையும் நாளை மறுநாளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்