5 மாநிலங்களில் போட்டியிட போகிறோம்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (13:06 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஐந்து மாநிலங்களில் போட்டியிட போவதால் தங்களுக்கு பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் திருமாவளவன் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளை கேட்டு உள்ளதாகவும் அதில் ஒரு தொகுதி பொது தொகுதி வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டெல்லி தேர்தல் ஆணையத்தில் பானை சின்னம் கோரி மனு அளித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளாவிலும் போட்டியிடப் போவதாகவும் 5 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடப் போவதால் எங்கள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்

இந்த மனுவை அடுத்து தேர்தல் ஆணையம் விரைவில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்