அதிதீவிரமாக உள்ள வர்தா புயல் சென்னையை நேரடியாக தாக்குகிறது. இந்த புயல் சென்னை அருகே இன்னும் சில மணி நேரங்களில் கரையை கடக்கிறது. சென்னையில் தற்பொழுது பயங்கரமான காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
அதிதீவிர வார்தா புயல் இன்று பிற்பகல் 2 மணிக்கும் 5 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சென்னை அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் போது காற்றின் வேகம் குறையும். ஆனால் மீண்டும் காற்றும் மழையும் அதிகரிக்கும். பொதுமக்கள், அரசு மற்றும் தேசிய மீட்பு குழுவினர் ஆலோசனை படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயலின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகம் இருக்கும். கடல் அலைகள் வழக்கத்தை விட 1 மீட்டர் உயரம் அதாவது 3 அடி அதிகரித்து காணப்படும். வர்தா புயல் கரையைக் கடந்த பின்னரும் 12 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.