கொரோனாவால் பாதிக்கப்பட்ட வானதி சீனிவாசன்.. உடல்நலம் குறித்து ட்விட்..!

வியாழன், 2 நவம்பர் 2023 (11:56 IST)
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசியத் தலைவியும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது தனது உடல் நலம் குறித்து வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்  காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன்.நலமுடன் இருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

 இதனை அடுத்து வானதி சீனிவாசன் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக பிரமுகர் சிலர் வானதி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்