ரஜினி, விஜய், கமலிடம் ஆதரவு கேட்போம்: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

Mahendran

திங்கள், 29 ஜனவரி 2024 (14:27 IST)
ரஜினி விஜய் கமல் உள்பட பிரபல நடிகர்களிடம் பாஜகவுக்கு ஆதரவு கேட்போம் என்றும் ஆதரவு தருவதும் தராததும் அவர்களது விருப்பம் என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போது திரைப்படம் நடிகர் நடிகர்களிடம் அரசியல் கட்சிகள் ஆதரவு கேட்கும் என்பதும் திரைப்பட நடிகர்கள் பலர் ஆதரவு குரல் கொடுப்பது மற்றும் பிரச்சாரம் செய்வது வழக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. 
 
இந்த நிலையில்  கோவை தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் வானதி சீனிவாசன் இது குறித்து கூறிய போது லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு நடிகர் நடிகைகளிடம் ஆதரவு கேட்போம் என்றும் குறிப்பாக ரஜினி விஜய் கமலிடம் ஆதரவு கேட்போம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பது கொடுக்காதது அவர்கள் விருப்பம் என்றும் ஆனால் நாங்கள் கேட்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  கமல்ஹாசன் கிட்டத்தட்ட திமுக கூட்டணியில் சேருவது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் விஜய்யும் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தெரிகிறது. எனவே ரஜினி மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்