இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்து இப்போது ரிலீஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அப்போது பேசிய லால் சலாம் படத்தின் இயக்குனரும், ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி “என் அப்பாவை சங்கி என விமர்சிக்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. இந்த படத்தில் அவரை தவிர தைரியமாக யாருமே நடித்திருக்க முடியாது. நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்த படம் உங்களைப் பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த் கண்டிப்பாக சங்கி இல்லை” எனக் கூறியிருந்தார்.