திருச்சி சிறையில் என்னை நிர்வாணப்படுத்தினார்கள்: மாணவி வளர்மதிக்கு நிகழ்ந்த கொடுமை!

சனி, 9 செப்டம்பர் 2017 (13:37 IST)
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.


 
 
சிறையில் இருந்து வெளியே வந்து அனிதாவுக்கு ஆதரவாகவும் நீட்டுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த வளர்மதியிடம் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று பேட்டி கண்டுள்ளது. அந்த பேட்டியில் முன்னதாக சிறைகளில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேசியுள்ளார் மாணவி வளர்மதி.
 
திருச்சி சிறையில் வளர்மதியை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது. மேலும் கோவை சிறையில் வளர்மதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர் எனவும் கூறப்பட்டது. இது குறித்து வளர்மதியிடம் கேட்கப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த வளர்மதி திருச்சியில் நடந்தது உண்மைதான் என கூறினார். நான் வெளிப்படையாக கூறுவதால் எனக்கு மட்டும் தான் அப்படி நடந்ததாக நினைக்க வேண்டாம். சாதாரண வழக்குல சிறைக்கு செல்பவர்களுக்குக்கூட இந்த கொடுமைகள் நடக்கின்றன.
 
ஒரு பெண் கூனிக்குறுகி மற்றவர்கள் முன்னிலையில் நிர்வாணமா நிற்கும் மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எல்லா சிறைச்சாலைகளும் இப்படித்தான் இருக்கின்றன. ஆனால் கோவையில் இந்த கொடுமைகளுக்கு நான் ஆளாக்கப்படவில்லை. ஆனால் வேறுவிதமான தொல்லைகள் கொடுத்தார்கள் என வளர்மதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்