திருமண மண்டபத்தை மருத்துவமனையாக தர முன்வந்த வைரமுத்து!

சனி, 8 மே 2021 (11:43 IST)
திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற முடிவெடுத்தால் எங்கள் மண்டபத்தை தருகிறோம் என வைரமுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 26,000 தாண்டி உள்ள நிலையில் கொரோனா வைரஸில் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அல்லது முழு ஊரடங்கு விதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. 
 
அந்த வகையில் நேற்று முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து தமிழகத்தில் மே 24 வரை, அதாவது மே 10 ஆம் தேதி முதல் (வரும் திங்கட்கிழமை) மே 24 தேதி வரை முழு ஊரடங்கு அமலபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.   
 
இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருப்பதால் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையும் போதாமல் உள்ளது. எனவே, திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற முடிவெடுத்தால் எங்கள் மண்டபத்தை தருகிறோம் என வைரமுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
அவரது பதிவு பின்வருமாறு, திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள் 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம். மணம் நிகழ்வதைவிட குணம் நிகழ்வதே மங்கலமல்லவா? 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்