ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் உணவகம் நடத்தி வரும் ஜாகீர் உசேன் என்பவரின் குழந்தை வழக்கம்போல் தனது வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. யாரும் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில், திடீரென சாலை நோக்கி அந்த குழந்தை ஓடிய நிலையில், ஆட்டோ ரிக்ஷா மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
சிசிடிவி காட்சிகளில், அந்த குட்டிப் பெண் மெதுவாக சாலை நோக்கி தள்ளாடி செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. அடுத்து நிகழவிருக்கும் ஆபத்தை அறியாமல் சென்ற போது ஆட்டோ முன்னோக்கி நகர, ஒரு நொடியில், அந்த வாகனம் குழந்தை மீது ஏறி செல்கிறது.
எதிர்திசையில் நடந்து வந்த ஒரு பெண் இந்த பயங்கரமான காட்சியைக் கண்டு, உடனடியாக அலறினார். அவரது அலறல் கேட்டு உஷாரான ஆட்டோ ஓட்டுநர், உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவந்து பார்த்தார். அதற்குள் அக்கம் பக்கத்தினரும், அங்கிருந்தவர்களும் கூடி, படுகாயமடைந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குழந்தையின் பெற்றோருக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.