நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய முதல்வருக்கு வைரமுத்து பாராட்டு!

புதன், 9 பிப்ரவரி 2022 (13:47 IST)
நீட் மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பிய முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்றே ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
 
இந்நிலையில் நீட் மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்கு உட்பட்டு மறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர் என கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 
 
நீட்தேர்வு மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்குட்பட்டு முறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர். "எடுத்தது கண்டார் இற்றது  கேட்டார்" என்று விரைந்து வினைப்படுகிறார் முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். நல்லது வாழ்க, நலமே சூழ்க என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்