பெருமைப் படுத்துங்கள், பிரதமர் அவர்களே! வைரமுத்து டுவிட்!

வியாழன், 17 ஜூன் 2021 (20:39 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முன்வைத்தார் என்பதும் இந்த கோரிக்கை குறித்த விவரங்கள் என்னென்ன என்பதை ஏற்கனவே பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி பெருமை படுத்துங்கள் பிரதமர் அவர்களே என கவியரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
நீட் தேர்வு
கல்விக் கோரிக்கை
 
திருக்குறள் தேசியநூல்
கலாசாரக் கோரிக்கை
 
தடுப்பூசி
உயிர்க் கோரிக்கை
 
வேளாண் சட்டங்கள்
உழவர் கோரிக்கை
 
ஜி. எஸ். டி
பொருளாதாரக் கோரிக்கை 
 
முன்வைத்தமைக்கு நன்றி
முதலமைச்சர் அவர்களே!
 
கோரிக்கைகளை
நிறைவேற்றித் தந்து
பெருமைப் படுத்துங்கள்
பிரதமர் அவர்களே!
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்