பிரதமரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! – வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

வியாழன், 17 ஜூன் 2021 (17:22 IST)
தமிழகத்தின் பல்வேறு தேவைகளை பிரதமரிடம் வலியுறுத்த டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் தேவைகளை வலியுறுத்துவதற்காக டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் பெறுவதற்கு அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டம், செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்துவது, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் முக ஸ்டாலின் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளதற்கு மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து கூறியதாகவும், அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்