ஹைட்ரோ கார்பன் திட்டம் - திருமாவளவன் எம்.பி. கண்டனம்

வியாழன், 17 ஜூன் 2021 (16:03 IST)
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்ததற்கு திருமாவளவன் எம்.பி. கண்டனம். 

 
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பு மற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 
இந்நிலையில் அரியலூரில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க சுற்றுசூழல் அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. முதல்வர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டு தமிழக சுற்றுசூழல் துறையிடம் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து திருமாவளவன் எம்.பி தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, அண்மையில் தமிழக முதல்வர், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாதென பிரதமருக்கு மடல் எழுதினார். ஆனால்,ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூரில் ஆய்வுக்கிணறுகள் அமைக்க தமிழ்நாடுஅரசிடமே சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்