நல்ல சமயமிது நழுவ விடலாமோ? வைரமுத்து டுவிட்!

ஞாயிறு, 20 ஜூன் 2021 (12:04 IST)
அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்து வருவதால் நல்ல சமயம் இது இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என கவியரசு வைரமுத்து பதிவுசெய்துள்ளார்
 
கடந்த சில வருடங்களாக ஏழை எளியவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் உள்பட பலரும் தனியார் பள்ளிகளிலேயே தங்களது குழந்தைகளை சேர்த்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் அதிக வசதிகள் பெருகி விட்டது என்பதும்., அரசு பள்ளிகளில் படித்தால் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் தற்போது அரசு பள்ளிகளில் சேர்க்க வந்து சேர்த்து வருகின்றனர் 
 
இந்த ஆண்டு மிக அதிக அளவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இதுகுறித்து கவியரசு வைரமுத்து அவர்கள் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
மகிழ்ச்சி...
 
அரசுப் பள்ளிகளில்
அதிகரிக்கிறது
மாணவர் சேர்க்கை
 
நல்ல சமயமிது
நழுவ விடலாமோ?
 
தாய்மொழிவழிக் கல்வியைத்
தாங்கிப் பிடிப்போம்
 
கட்டமைப்பைக்
கட்டியெழுப்புவோம்
 
தனியார் பள்ளியினும்
தரம் கூட்டுவோம்
 
நாட்டுக்கு நம்பிக்கை தருவோம் 
நானும்
அரசுப் பள்ளி மாணவன்தான்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்