வைகோவுக்குப் பதில் அவர் மகன் – மதிமுக நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்று ஆறுதல் !

திங்கள், 23 செப்டம்பர் 2019 (08:44 IST)
மதிமுக மாநாட்டில் பேனர் வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மதிமுக நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார் வைகோவின் மகன் துரை வையாபுரி.

மதிமுக சார்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பிதாமகன் அறிஞர் அண்ணாவின் 110 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்காக தி நகர் மற்றும் சென்னையின் இதரப் பகுதிகளில்  பேனர்கள் வைக்கப்பட்டன. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது மதிமுகவினருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மதிமுக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டுக்கு சென்ற வைகோவின் மகன் துரை வையாபுரி குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார். வைகோ ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளதால் அவர் சார்பாக வைகோ சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் வைகோவின் மகனுக்குக் கட்சியில் பதவி கொடுப்பதற்காகவே இதுபோன்ற நிகழ்வுகளில் அவர் முன்னிறுத்தப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்