’வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு சிறப்பு விழா: தமிழக கேரள முதல்வர்கள் பங்கேற்பு!

வியாழன், 28 டிசம்பர் 2023 (16:32 IST)
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக கேரளா முதலமைச்சர்கள் பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  
 
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற வைக்கம் நூறாண்டு சிறப்பு விழாவில் கலந்து கொண்டார்.. மேலும் இதே விழாவில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் கலந்து கொண்டார்.
 
கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் கோவிலை சுற்றி அமைந்துள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை நீக்க நடந்த போராட்டம் தான் வைக்கம் போராட்டம்.
 
 கேரள தலைவர்களின் அழைப்பின் பேரில் தந்தை பெரியார் வைக்கம் சென்று அந்த போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.  இந்த போராட்டத்திற்கு பின்னர் தான் அனைத்து மக்களும் தெருக்களில் நடக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது 
 
இந்த நிலையில் வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறாண்டு ஆகிய நிலையில் அதன் நூற்றாண்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில் இதில் தமிழக மற்றும் கேரள முதலமைச்சர் கலந்து கொண்டனர் என்பதும்  தந்தை பெரியாரின் நினைவிடத்தில் இருவரும் மலர் தூவி மரியாதை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்