தடுப்பூசி போடாவிட்டால் பயணம் ரத்து - தனிப்படை அமைத்து கண்காணிப்பு!

சனி, 15 ஜனவரி 2022 (12:25 IST)
2 தவணை தடுப்பூசி போடாமல் பயணம் செய்பவர்களை கண்காணிக்க அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டது. 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் அதிகபட்சமாக 6,000 கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. இதனால் சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் தற்போது சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாதாந்திர சீசன் டிக்கெட் பெறுவோர் 2 டோஸ் தடுப்பூசியும் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி சான்றிதழ் இருந்தால்தான் சீசன் டிக்கெட் பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் புறநகர் ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாமல் செல்லும் பயணிகளிடம் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே 2 தவணை தடுப்பூசி போடாமல் பயணம் செய்பவர்களை கண்காணிக்க அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கண்காணிப்பில் ஜனவரி 10 மற்றும் 11 ஆம் நாட்களில் மட்டுமே 2 தவணை தடுப்பூசி போடாத 7,762 பேரை ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்