தடுப்பூசி போடதவர்களுக்கு பொது இடங்களில் தடை - எங்கு தெரியுமா?

திங்கள், 6 டிசம்பர் 2021 (11:24 IST)
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்கு செல்ல தடை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அதிகமாக இருந்த நிலையில் தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும் கூட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம்தோறும் நடத்தப்படுகின்றன. எனினும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்கு செல்ல தடை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, ரேஷன் கடைகள், டீக்கடைகள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், ஹோட்டல்கள், திரையரங்குகள், தங்கும் விடுதிகள், கடை வீதிகள், பெட்ரோல் நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். 
 
முன்னதாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகளில் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே மதுபானம் வழங்கபப்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்