கொரோனா திருவிழா முதல் நாளில் 27 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி!

திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:22 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக தடுப்பூசியை அதிகம் செலுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது 
 
இதனை அடுத்து நேற்று முதல் அதாவது ஏப்ரல் 11 முதல் நாடு முழுவதும் கொரோனா திருவிழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ஒமுதல் நாளன்று இந்தியா முழுவதும் சுமார் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அதேபோல் இந்தியாவில் இன்று இரண்டாவது நாளாக கொரோனா தடுப்பூசி திருவிழா கொண்டாடப்படுகிறது என்றும், நேற்றைவிட இன்று அதிக தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே இலக்காக உள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்