தமிழகத்தில் 11ம் தேதி வரை செம மழைக்கான வாய்ப்பு! – எந்தெந்த பகுதிகளில்?

Prasanth Karthick

வெள்ளி, 5 ஜூலை 2024 (15:45 IST)

தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் ஜூலை 11 வரையில் தமிழகத்தில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மிதமான அளவில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான அளவிலான கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். 

இன்று முதல் 9ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வரை வீசக்கும் இதனால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்