சொதப்பிய சுரங்க பாதை மெட்ரோ ரயில்; பயணிகள் அதிருப்தி

புதன், 17 மே 2017 (16:10 IST)
சென்னையில் பறக்கும் மெட்ரோ ரயிலில் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தாத நிலையில் அதிக ஆவலை ஏற்படுத்திய சுரங்க பாதை மெட்ரோ ரயில் திட்டமும் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தொடங்கி வைத்த சுரங்க பாதை மெட்ரோ ரயில் இரண்டாவது  நாளிலேயே சொதப்பியுள்ளது. நேரு பூங்காவில் இருந்து அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் மெட்ரோ ரயிலில் மக்கள் ஆசையோடு பயணம் செய்துள்ளனர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 10 முதல் 15 நிமிடங்கள் நின்ற ரயில், ஷெனாய் நகர் ரயில் நிறுத்ததில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வலுகட்டாயமாக பாதிலே இறக்கி விடப்பட்டனர். இதனால் பயணிகளிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டது.  
 
சுரங்க பாதை மெட்ரோ ரயில் சென்னை முழுவதும் அனைவரிடமும் பெரும் ஆவலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சரியாக சேவை வழங்காததால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஏற்கனவே பறக்கும் மெட்ரோ ரயிலில் பயணிகளை அதிகரிக்க போராடி வருகின்றனர். 
 
தற்போது சுரங்க பாதை மெட்ரோ ரயில் சேவையும் மக்களிடை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் சேவை பிரபலமாவது தற்போதைக்கு பெரும் சிரமம்தான் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்