போட்டி நடக்குறது இந்தியில; அறிவிப்பு மட்டும் தமிழ்ல! – பங்கம் செய்த உதயநிதி!

வெள்ளி, 2 அக்டோபர் 2020 (14:52 IST)
காந்தி பிறந்தநாளில் நடத்தப்படும் புதிர் போட்டியில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழில் கேள்விகள் கேட்கப்படாதது குறித்து உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மகாத்மா காந்தி பிறந்தநாளில் மரியாதை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையால் காந்தி குறித்து வினாடி வினா போட்டிகள் நடைபெறுவதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த வினாடி வினா போட்டிகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே `நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக கருத்து தெரிவித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “தமிழக மாணவர்களுக்கு காந்தியடிகள் குறித்து இந்தியில் புதிர் போட்டி நடத்துகிறது எடுபிடி அரசு. இந்தியைத் திணித்து தமிழை புறந்தள்ளினால் விளைவுகள் மோசமாகும்.டெல்லிக்கு அடிமையான கூவத்தூர் கும்பல், இந்திக்கு கொத்தடிமையானது பிழைப்புவாதத்தின் உச்சம்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்