வேளாண் மசோதாவுக்கு எதிராக கூடிடுவாங்கன்னு பயம்! – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:13 IST)
தமிழகத்தில் நடக்க இருந்த கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது குறித்து மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக நடக்காமல் இருந்த கிராம சபை கூட்டத்தை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நாளை கிராம சபை கூட்டம் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா பரவல் அபாயம் இருப்பதால் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் “வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கிராம சபை கூட்டத்தை கூட்டினால் அதற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி விடுவார்கள் என பயந்து கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மக்கள் சகஜமாக பயணிக்க செய்துவிட்டு, கொரோனாவை காரணம் காட்டி அதிமுக அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துள்ளது. கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும் திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் வீடு வீடாக சென்று வேளாண் மசோதா குறித்து எடுத்துரைப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்