பாவம் கொரோனாவே கன்ஃப்யூஸ் ஆகப்போவுது: உதயநிதி டுவீட்

வெள்ளி, 12 ஜூன் 2020 (17:48 IST)
கொரோனா வைரஸ் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த கொரோனாவை தடுப்பதற்காக மாநில அரசும் அரசின் சுகாதாரத் துறையும் சென்னை மாநகராட்சியும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  கட்டுப்படுத்த முடியவில்லை என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் எண்ணிக்கை தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அவர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு அந்த பதவிக்கு இராதாகிருஷ்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று காலை அறிவித்தது. சற்று முன் அவர் சுகாதாரத் துறைச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சுகாதார செயலாளர் மாற்றப்பட்டதற்கு பின்னராவது சென்னையிலும் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு ராதாகிருஷ்ணன் சுகாதார செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறித்து நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு பீலா நியமனம். அதே ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னைக்கு ஒரு குழு. 6 அமைச்சர்கள் கொண்ட மேற்பார்வை குழு. இவர்களை ஒருங்கிணைக்க பங்கஜ்குமார் நியமனம். தற்போது பீலா மாற்றப்பட்டு மீண்டும் ராதாகிருஷ்ணன். பாவம் கொரோனாவே கன்ஃப்யூஸ் ஆகப்போவுது! 

ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு பீலா நியமனம். அதே ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னைக்கு ஒரு குழு. 6 அமைச்சர்கள் கொண்ட மேற்பார்வை குழு. இவர்களை ஒருங்கிணைக்க பங்கஜ்குமார் நியமனம். தற்போது பீலா மாற்றப்பட்டு மீண்டும் ராதாகிருஷ்ணன். பாவம் கொரோனாவே கன்ஃப்யூஸ் ஆகப்போவுது! #EPSHidingCoronaDeaths

— Udhay (@Udhaystalin) June 12, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்