ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை மறைத்த அரசு, 444 மரணத்தை மறைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது: உதயநிதி

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (17:40 IST)
கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் இறங்கி உள்ள நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி தனது டுவிட்டரில் அவ்வப்போது ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வந்தார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று விடுபட்ட 444 கொரனோ மரணங்களை தமிழக அரசு இணைத்தது குறித்து தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை குறித்து மீண்டும் ஒருமுறை பதிவு செய்துள்ளார். ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தையே மறைத்த அடிமைகள் என்று உதயநிதி சற்று கடுமையாகவே தாக்கி பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டில் உதயநிதி கூறியிருப்பதாவது:
 
ஜெயலலிதா மரணத்தின் பின்னாலுள்ள மர்மத்தை மறைக்க ஆரம்பித்தவர்கள் இன்று 444 கொரோனா மரணங்களை மறைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர். ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனையும் கடிக்கும் அடிமைகளின் இந்த பணவெறி ஆட்சியைச் சீக்கிரமே வேரோடு பிடுங்கி எறிவோம்! 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்