ஊடகங்களை சாடிய உதயநிதி: கோபத்தின் காரணம் என்ன?

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (12:28 IST)
திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் ஊடகங்களை சாடியுள்ளார். 
 
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே மார்ச் மாதம் நடைபெற வேண்டிய தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு ஜூன் முதல் நாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15 தேர்வு நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
 
இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னணியில் திமுகவின் அழுத்தம் உள்ளதாக பேசிக்கொண்டனர். 
 
இந்நிலையில், திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் ஊடகங்களை சாடியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, இன்றைய பேசுபொருளான 10ம் வகுப்பு தேர்வு ரத்து பற்றி விவாதித்தால் அதற்கு காரணமான தலைவர் ஸ்டாலின் அவர்களை பாராட்ட வேண்டிவருமென்று கொரோனாவுடன் இன்று கரை ஒதுங்கிவிட்டனர். அடிமைகளை கண்டே அஞ்சுபவர்கள் உண்மையை எப்படி உரக்க பேசுவர்? என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்