சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்கவில்லை. அங்கு வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுத்ததாக தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலை ரத்து செய்தது. இதனையடுத்து அண்மையில், வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து தற்போது வேலூர் தொகுதியில் அனைத்து கட்சிகளூம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக - அதிமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் அத்தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார். திமுக தரப்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக போட்டியிடுகிறார்.