உதயநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது எனக்கு மட்டுமல்ல கட்சியில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி என்றும், உதயநிதி திரைப்பட நடிகர் என்பதால் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளதாகவும் அது கட்சிக்கு பெரும் பயன் அளிக்கும் என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.
மேலும் தந்தையை போலவே இளைய தலைமுறையினரை உதயநிதி ஈர்ப்பார் என்றும், ஸ்டாலினின் மகன் என்கிற செல்வாக்கை தாண்டி உதயநிதி ஆற்றல்மிக்கவர் என்று கூறிய துரைமுருகன், உதயநிதியின் தேர்தல் பிரசாரங்களை பார்த்து நானே வியந்து போனேன் என்றும், * சொல்ல வேண்டிய கருத்தை கேட்பவர்கள் இதயத்தில் பதியும்படி உதயநிதி பேசுவார் என்றும் உதயநிதிக்கு அவர் புகழாரம் சூட்டினார்.
அதேபோல் "உதயநிதி ஸ்டாலின் நியமனத்தை வாரிசு அரசியல் என சொல்லமுடியாது என்று கூறிய திமுக பிரமுகர் ஜெ.அன்பழகன், 'அனைத்து இடங்களிலும் வாரிசுகள் இருப்பதாகவும் திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.