சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து! சிபிஐ அலட்சியமா?

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (11:16 IST)
சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகளை சென்னை ஐகோர்ட் அதிரடியாக ரத்து செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தபோது புதியதாக ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த நோட்டுக்கள் அறிமுகமான ஒருசில நாட்களில் கோடிக்கணக்கில் சேகர் ரெட்டியின் வீட்டில் ரூ.2000 நோட்டுக்கள் சிக்கின.
 
இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில் புதிய ரூ.2000 நோட்டுக்கள் பதுக்கப்பட்ட வழக்கு உள்பட இரண்டு வழக்குகளை சென்னை ஐகோர்ட் இன்று ரத்து செய்துள்ளது. 
 
ஒரே குற்றச்செயலுக்கு 3 வழக்குகளை பதிவு செய்ததாக சேகர் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சிபிஐ பதிவு செய்த 2 வழக்குகளை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கை மட்டும் விசாரணை செய்யவுள்ளது. மேலும் இந்த வழக்கில் மேலும் ஆதாரங்களை சேகரிக்க முடியாமல் சிபிஐ திணறுவதாகவும் இந்த வழக்கில் சிபிஐ அலட்சியம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்