தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்த நிலையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது என்பதும் வழக்கம் போல் மாணவிகள் அதிக சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக 94 சதவீதத்திற்கும் அதிகமாக மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பஞ்ச நதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இரட்டையர்களான நிகில் மற்றும் நிர்மல் ஆகிய இருவரும் 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே பள்ளியில் படித்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது ஆசிரியர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது