தமிழக வெற்றி கழகத்தின் கொடி என்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இரண்டு வண்ணங்களில் உள்ள இந்த கொடியில் இரண்டு யானைகள் மற்றும் வாகை மலர் இருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த வாகை மலர் சங்க இலக்கியங்களில் இருந்த மலர் என்று கூறப்படும் நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி இந்த மலர் சங்க இலக்கியங்களில் உள்ள வாகை மலர் அல்ல என்றும் தூங்குமூஞ்சி வாகை என்றும் கூறப்பட்டு வருகிறது.
பிங்க் நிறம் கொண்ட இந்த வாகை தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தது என்றும் இதனை மக்கள் தூங்கும் மூஞ்சி வாகை என்று அழைக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சங்க இலக்கியங்களில் உள்ள வாகை மலர்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களை கொண்டதாக இருக்கும் என்றும் எனவே தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படும் வெற்றியை குறிக்கும் வாகை மலர் இது அல்ல என்றும் இது தென் அமெரிக்காவிலிருந்து வந்த தூங்குமூஞ்சி வகை வாகை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த வாகை மலர் மற்றும் இரண்டு யானைகளுக்கு முதல் மாநாட்டின் போது தவெக தலைவர் விஜய் விளக்கம் அளிக்க இருக்கிறார் என்பதை அடுத்து அவர் என்ன விளக்கம் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.