நாய்வாலை நிமிர்த்த முடியாது.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடர்வேன்! குஷ்பு!

Mahendran

சனி, 15 ஜூன் 2024 (14:17 IST)
நாய் வாலை நிமிர்த்த முடியாது என்றும் தமிழிசையை அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடர்வேன் என்றும் நடிகை குஷ்பு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் உள்துறை அமைச்சர் தமிழிசை சௌந்தரராஜன் கூப்பிட்டு கண்டித்ததாக கூறப்பட்ட வீடியோ வைரலானது. இந்த நிலையில் திமுக பேச்சாளர் சுவாஜி கிருஷ்ணமூர்த்தி இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அதற்கு நடிகையும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ஆன குஷ்பூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
நாய் வாலை நிறுத்த முடியாது என்பார்கள், அதுபோல் தொடர்ந்து பெண்கள் குறித்து தகாத வார்த்தைகளில் சிவாஜிகிருஷ்ணமூர்த்தி பேசி வருகிறார். திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்து ஆபாசமாக பேசியதற்கு அவர் மீது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற அடிப்படையில் வழக்கு தொடர்வேன்.
 
பெண்களை அவமதிப்பதில் திமுகவுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது’ என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்