ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமின் கோரி வழக்கு.. காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran

செவ்வாய், 18 ஜூன் 2024 (16:03 IST)
சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட  ஃபெலிக்ஸ் ஜெரால்ட்  ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   
 
இன்றைய விசாரணையின்போது நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை பதிலளித்த பின்னரே தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
முன்னதாக பெண் போலீசாரை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் ஃபெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் என்பதும், அந்த ஜாமின் விசாரணை இழுத்து கொண்டே செல்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்