டங்க்ஸ்டன் ஒப்பந்த ரத்து: சாதித்தது எடப்பாடி.. பாராட்டு விழா மத்திய அமைச்சருக்கா? - செல்லூர் ராஜூ வருத்தம்!

Prasanth Karthick
சனி, 1 பிப்ரவரி 2025 (14:05 IST)

மதுரை அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்க ரத்து விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரை மத்திய, மாநில அரசுகள் இருட்டடிப்பு செய்துவிட்டதாக முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ வருத்தத்துடன் பேசியுள்ளார்.

 

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது குறித்து சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய குரலை தொடர்ந்து, இந்த திட்டத்தை ரத்து செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய நிலையில், அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.

 

அதை தொடர்ந்து மதுரையில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்ட நிலையில், திட்டத்தை ரத்து செய்ததற்காக இன்று பாஜகவினர் மத்திய அமைச்சரை மதுரைக்கு அழைத்து விழா நடத்தினார்கள்.

 

இதுகுறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “திமுக அமைச்சர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்து வந்தும், பாஜகவினர் மத்திய அமைச்சரை அழைத்து வந்தும் மதுரையில் பாராட்டு விழா நடத்துகின்றனர். ஆனால் உண்மையில் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கேள்வி கேட்ட பின்னர்தான் டங்க்ஸ்டன் விவகாரத்தில் முடிவு கிடைத்தது” என்று பேசியுள்ளார்.

 

மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதுபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டிக் கொண்டாலும், உண்மை நிலவரம் மோசமாக உள்ளதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 5 வயது சிறுமி முதல் மூதாட்டி வரை அனைவருகும் பாதுகாக்கப்படுவர் என்றும் பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்