மதுரை ஆதினம் பொய் பேசுகிறார் – டிடிவி தடாலடி !

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (15:17 IST)
அதிமுக மற்றும் அமமுக அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக் ஈபிஎஸ் அணி மற்றும் டிடிவி அணி என இரண்டாகப் பிரிந்தது. கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை ஈபிஎஸ் வசம் உள்ளன. ஆனால் அவ்வபோது இரு அணிகளும் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி வருவதும் அதை டிடிவி தினகரன் மறுப்பதும் வழக்கமாகி வருகிறது.

இந்தமுறை மதுரை ஆதினம் அதே செய்திக்கு மீண்டும் திரியைப் பற்றவைத்தார். அதிமுகவுடன் அமமுகவை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கடந்த நேற்று செய்தியாளர்களிடம் கும்பகோணத்தில் தெரிவித்தார். மதுரை ஆதினம் கூறியதால் அந்த செய்தியில் உண்மை இருக்குமோ என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இம்முறையும் அதற்கு வாய்ப்பில்லை என தினகரன் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவரது டிவிட்டரில் ‘அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்து வருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை!" எனத் தெரிவித்துள்ளார். அதுபோலவே எடப்பாடி பழனிச்சாமியும் நேற்று அமமுகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்