அம்மாவின் ஆட்சி என இனி யாரும் கூறாதீர்கள் - தினகரன் காட்டம்

சனி, 18 நவம்பர் 2017 (10:43 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் யாரும் இனிமேல் அம்மாவின் ஆட்சி எனக் கூறாதீர்கள் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 

 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சசிகலா தங்கியிருந்த அறையில் மட்டும் மொத்தம் 10 அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
 
வாரண்ட் இல்லாததால் ஜெ.வின் அறையில் அதிகாரிகளால் சோதனை நடத்த முடியவில்லை. முடிவில், 2 லேப்டாப்,  பென் டிரைவ், ஜெ.விற்கு வந்த சில அரசியல் கடிதங்கள் மற்றும் சில ஆவணங்களை மட்டும் அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது.
 
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன் “ ஜெ.வின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருப்பது முழுக்க முழுக்க அரசியல் பிண்னனி கொண்டது. இதற்கெல்லாம் நாங்கள் பயப்படப்போவதில்லை. சோதனை நடைபெற்ற போது, எங்கள் அணியை சேர்ந்த அதிமுகவினரே அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ஜெயலலிதாவின் இல்லம் நோக்கி வணங்குகிறோம் எனக் கூறிக்கொள்ளும் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் எவரும் அங்கு செல்லவில்லை. 
 
சுயலாபம் மற்றும் பயம் கருதியும், தங்கள் பதவிகள் நீடித்தால் போதும் என நினைத்தே இவர்கள் அமைதி காக்கிறார்கள். அம்ன் ஆட்சி என எல்லா மேடையிலும் பேசும் இவர்கள், ஜெ.வின் வீட்டில் சோதனை நடந்ததற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே, இனிமேல் அம்மாவின் ஆட்சி என இவர்கள் கூறக்கூடாது” என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்