அண்ணன் அண்ணனு திரிஞ்சவன், இப்போ பதவி போதையில... டிடிவி புலம்பல்!

செவ்வாய், 26 நவம்பர் 2019 (12:21 IST)
துரோகம் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகத்தைப் பற்றி பேசுகிறார் என அமமுக பொதுச்செய்லாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். 
 
அமமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று வெளியே வந்த அமமுக பொதுச்செய்லாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, துரோகம் என்ற வார்த்தைக்கு வரும் காலத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகத்தைப் பற்றி பேசுகிறார். 
 
எடப்பாடி பழனிசாமி பொய்யை உண்மை போல பேசுவார். அவர் செய்யும் தவறை மறைக்க அடுத்தவர்கள் மீது பழியைப் போடுவார். அண்ணன் தினகரனுக்கு ஓட்டு போடங்க என்று சொல்லி எனக்காக ஆர்கேநகரில் பிரசாரம் செய்தவர்கள், இப்போது பதவி இருக்கிறது என என்ன வேண்டுமானாலும் பேசுகின்றனர்.
 
காலம் இதற்கு பதில் சொல்லும். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெல்லும் என பேசியுள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடும் என அறிவித்துள்ள நிலையில் தற்போது விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்