தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் விருப்ப மனுக்களை பெற்று வரும் நிலையில் இரண்டு கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விரும்பவில்லை என்று கருதுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இன்னும் ஒரு ஆண்டில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இந்த தேர்தலில் எந்த கட்சி தோற்றாலும் அந்த கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்பதால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக, திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது
மேலும் உள்ளாட்சி தேர்தலில் தொகுதிகளை பிரித்து கொடுப்பதிலும் சிக்கல் இருப்பதால் கூட்டணி கட்சிகளின் அதிருப்திகளை பெற வேண்டிய நிலை வரலாம் என்றும், இது சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சனையாக மாறும் என்றும் இருதரப்பினர் கருதுவதாக தெரிகிறது