சசிக்கலா காலில் விழுந்தது என் தம்பி என்பார் எடப்பாடி! – டிடிவி தினகரன் பேச்சு!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (09:00 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக, தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் தாதாகப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் “எட்டப்பராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தால்தான் சசிக்கலா முதல்வர் பதவி ஏற்க முடியவில்லை. தற்போது எடப்பாடி பழனிசாமி நவீன எட்டப்பராக உள்ளார். அண்ட புழுகன், ஆகாச புழுகன் என்பது போல எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமி புழுகன் என்ற வார்த்தை உருவாகலாம். சசிக்கலா காலில் விழவில்லை என சொல்பவர், இனி தன்பெயர் பழனிசாமி அல்ல குப்புசாமி என்றும், சசிக்கலா காலில் விழுந்தது தனது தம்பி என்றும் கூட சொல்லுவார்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்