நான் மகான் அல்ல; பழனிச்சாமி புனிதருமல்ல : டிடிவி தினகரன்

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (16:06 IST)
கரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆ.கே.நகர் சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ வுமான டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

 
அப்போது அவர் கூறியதாவது:
 
உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில், சி.பி.ஐ விசாரணை தேவை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டிய போது., மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, இன்று சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என்று மனு போட்டுள்ளார்.
 
அவரது ஆட்சியில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்திய போது., அப்போது வாய்திறக்காத முதல்வர், அவரை விட்டு விட்டு, அவருக்கே (முதல்வர்), சி.பி.ஐ விசாரணை என்ற போது அவர் எவ்வளவு பயப்பட்டுள்ளார் என்பதை தெரிந்துள்ளது. இந்த ஒன்றே போதும் முறைகேடு நடந்துள்ளது என்று.
 
மேலும், அவர் பகிர்ந்து கொண்ட பல தகவல்களுக்கு வீடியோவை பார்க்கவும்..
 
-சி. ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்