சசிகலாவை கட்சியை விட்டு ஓரம் கட்டினேனா? காண்டான டிடிவி தினகரன்

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (15:18 IST)
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்த மறுதினம் அமமுகவின் பொதுக்குழு கூட்டம் அசோக் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 
 
அதில், அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது என்றும் தற்போதைய துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரனை அக்கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிப்பதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.
 
அதன்பின்னர் டெல்லியில் அமமுகவை கட்சியாக பதிவு செய்து  பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன். இதனையடுத்து தினகரன் சசிகலாவை கட்சியில் இருந்து ஓரம் கட்டிவிட்டு பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் என செய்திகள் வெளியானது. இதற்கு பதில் அளித்துள்ளார் தினகரன். 
அவர் கூறியதாவது, நான் அனைத்து முடிவுகளையும் சசிகலாவை அணுகிதான் எடுத்து வருகிறேன். சசிகலாவிற்கு தெரியாமல் கட்சியில் எதுவும் நடக்கவில்லை. இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் சசிகலாவின் ஒப்புதலுடன்தான் எடுக்கப்பட்டு வருகிறது.
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சசிகலா ஓரம்கட்டப்படவில்லை. அமமுகவை பதிவு செய்ய அனைவரும் விரும்பினோம். இந்த விருப்பம் சசிகலாவிற்கும் இருந்தது. இதனால் சசிகலா ஓரம் கட்டப்பட்டுவிட்டதாக கருத கூடாது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்