கடலூர் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு திருச்சி காஜாமலையை சேர்ந்த ரகமத் நிஷா என்ற கல்லூரி மாணவியுடன் ஃபேஸ்புக் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஃபேஸ்புக்கில் அடிக்கடி ஆபாசமாகவும், பாலியல் சம்பந்தமாகவும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் வினோத்தை நேரில் வரும்படி ரகமத் நிஷா கூறியுள்ளார். பலவிதமான கற்பனைகளால் ஆபத்தை உணராமல் ரஹமத் நிஷாவை சந்திக்கு திருச்சி சென்றுள்ளார் வினோத்.
விசாரணையில் வினோத்தை கடத்தியது ரகமத் நிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க உள்ள அன்சாரி ராஜா என்பது தெரிய வந்துள்ளது. அன்சாரி ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் ரகமத் நிஷா மூலம் ஃபேஸ்புக்கில் ஆசை வார்த்தை பேசி ஆட்களை வரவழைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அன்சாரி ராஜாவின் கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.