திருச்சி - வியட்நாம் இடையே நேரடி விமான சேவை: சுற்றுலா, வர்த்தகம் வளர்ச்சி அடையும் என தகவல்..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (13:06 IST)
திருச்சியிலிருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட உள்ளதை அடுத்து சுற்றுலா மற்றும் வர்த்தகம் மேம்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா, துபாய், கொழும்பு போன்ற நாடுகளுக்கு விமான சேவை இருந்து வருகிறது. 
 
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்படும் விமான நிலையத்திலிருந்து  இன்னும் பிற நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட உள்ளன. 
குறிப்பாக  வியாட்நாமில் இருந்து செவ்வாய் , வியாழன்  மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும்  திருச்சியில் இருந்து திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களிலும் நேரடி விமானம் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
வியாட்நாமில் இருந்து இரவு 8 மணிக்கு கிளம்பும் விமானம் திருச்சிக்கு இரவு 11 மணிக்கு வந்தடையும் என்றும் திருச்சியில் இருந்து நள்ளிரவு 12:30 மணிக்கு கிளம்பும் விமானம் காலை 7 மணிக்கு வியட்நாம் சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்