பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷா, ஜே.பி. நட்டாவுடன் சந்திப்பு..!

Mahendran

வியாழன், 6 ஜூன் 2024 (16:01 IST)
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதியம் கோவையில் இருந்து டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், அவரது திடீர் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோவையில் போட்டியிட்ட அண்ணாமலையும், வெற்றி பெறவில்லை.
 
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அண்ணாமலையின் முதல் டெல்லி பயணம் இது என்பதும், இந்த பயணத்தில் அவர் அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தேர்தலில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, கட்சி தலைமையிடம் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் தேர்தலில் தோல்வியடைந்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறப்படும் நிலையில் இது குறித்து கலந்து ஆலோசிப்பதற்காகவும் அவர் டெல்லி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்